11-ம் வகுப்பு தோல்வி; துணை ஆட்சியரான விவசாயி மகள் - யார் இந்த பிரியால் யாதவ்?
துணை ஆட்சியராக தேர்வாகியுள்ள பிரியால் யாதவ் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
பிரியால் யாதவ்
மத்தியப் பிரதேசத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த பிரியால் யாதவ் என்ற பெண் MPPSC தேர்வில் வெற்றி பெற்று தனது 27 வயதில் துணை ஆட்சியர் பதவியில் அமர்ந்துள்ளார். இவர் தனது 10-ம் வகுப்பு வரை நன்கு படித்து வந்துள்ளார்.
ஆனால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அழுத்தத்தால் 11-ம் வகுப்பில் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார். பின்னர் பிடிக்காத பாடத்தைப் படிதத்தால் அவர் இயற்பியலில் தோல்வியடைந்திருந்தார்.
துணை ஆட்சியர்
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த MPPSC தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், பல தடைகளை உடைத்தெறிந்த பிரியால் யாதவ் தனது கடின உழைப்பால் 16-வது ரேங் எடுத்து அசத்தியுள்ளார்.
தற்போது துணை ஆட்சியராக தேர்வாகியுள்ள அவர் அடுத்ததாக யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார். தோல்வி என்பது ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்கும் என்பதற்கு பிரியால் யாதவ் ஒரு உதாரணம்.