நாங்குநேரி சாதி வெறி தாக்குதல்: +2 தேர்வில் சாதித்த மாணவன் - மதிப்பெண் தெரியுமா?
சாதி ஆணவத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
சின்னத்துரை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதியினர் முனியாண்டி - அம்பிகாபதி. இவரது மகன் சின்னத்துரை (17) என்பவர் வள்ளியூரிலுள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே கடந்த ஆண்டு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 3 பேர், சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சை பெற்றனர்.
தேர்வாகி அசத்தல்
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சாதிய வன்மத்தால் சின்னத்துரையுடன் படித்த சக மாணவர்கள் இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமானது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை தனது 12-ம் வகுப்பு காலாண்டு தேர்வை மருத்துவமனையிலேயே எழுதினார்.
இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வை எழுதிய அவர், 600 மதிப்பெண்ணுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். சின்னத்திரைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.