Thursday, May 1, 2025

குடிபோதையில் வந்த ஆசிரியர்; ஓட,ஓட விரட்டிய பள்ளி மாணவர்கள் - viral video!

Chhattisgarh School Incident
By Swetha a year ago
Report

குடி போதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போதை ஆசிரியர்

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து மது போதையில் பள்ளிக்கு வந்துள்ளார். மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் தினமும் தரையில் படுத்து தூங்குவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.

குடிபோதையில் வந்த ஆசிரியர்; ஓட,ஓட விரட்டிய பள்ளி மாணவர்கள் - viral video! | School Children Throw Slippers At Drunk Teacher

குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குழந்தைகள், போதை ஆசிரியருக்கு தகுந்த பாடம் புகட்ட விரும்பியுள்ளனர்.

பார்த்ததும் கதறியழுத மூதாட்டி - ஆறுதல் படுத்த முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்!

பார்த்ததும் கதறியழுத மூதாட்டி - ஆறுதல் படுத்த முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்!

பள்ளி மாணவர்கள்

இந்நிலையில், அண்மையில் போதை ஆசிரியர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். கோபமடைந்த மாணவர்கள் தங்கள் செருப்புகளை எடுத்து போதை ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர்.

குடிபோதையில் வந்த ஆசிரியர்; ஓட,ஓட விரட்டிய பள்ளி மாணவர்கள் - viral video! | School Children Throw Slippers At Drunk Teacher

அடுத்தடுத்து செருப்புகள் அவர் மீது விழத் தொடங்கியதும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஆசிரியர் தப்பியோட முயன்றார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசியபடியே விரட்டியடித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.