பார்த்ததும் கதறியழுத மூதாட்டி - ஆறுதல் படுத்த முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்!
பணத்தை தொலைத்து விட்டேன் என மூதாட்டி முதல்வர் ஸ்டாலினிடம் கதறியழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
எந்த ஊரில் அவர் தாக்கியிருந்தாலும் காலையில் நடைபயிற்சிக்கு சென்று அப்பகுதி மக்களை சந்திப்பது அவரது வழக்கமாகும். அதன்படி, தூத்துக்குடி தங்கிய அவர் காலை நடைபயிற்சிக்கு செல்லும் வழியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார்.
ஆறுதல் படுத்தினார்
இந்நிலையில், அங்கிருந்த காய்கறிச் சந்தைக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது திடீரென முதல்வரிடம் ஓடிவந்த மூதாட்டி ஒருவர், தான் காய்கறி வாங்குவதற்காக 1,500 ரூபாய் பணத்தை வைத்திருந்ததாகவும்,அதை எங்கேயோ தொலைத்துவிட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
அதனை பார்த்ததும் முதல்வர் மற்றும் அருகிலிருந்த கனிமொழி என இருவரும் கதறியழுத மூதாட்டியை ஆறுதல்படுத்தினார். பின்னர், திமுக சார்பில் அவருக்கு 2,000 ரூபாய் பணம் உடனடியாக வழங்கப்பட்டது. அதற்கு மூதாட்டி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ரணிலிடம் 800 மில்லியன் வாங்கிய சாணக்கியன் - என்ன நடந்தது: அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி. IBC Tamil

இதை மட்டும் செய்தால் உடன் நீக்கப்படும் 25வீத வரி : இந்தியாவிற்கு நிபந்தனை விதிக்கும் அமெரிக்கா IBC Tamil

நடிகர் சிவகார்த்திகேயன் பிள்ளைகள் எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க... வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் Manithan
