படிச்சது 7ஆம் வகுப்பு தான்.. சாகித்ய அகாதெமி விருது வாங்கிய டெய்லர் - பின்னணி
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
நிராகரித்த பதிப்பகங்கள்
2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி வழங்கி வரும் யுவ புரஸ்கார் விருது நாடு முழுவதும் உள்ள 23 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இளம் எழுத்தாளர் தேவிதாஸ் சவுதாகர்.
இவர் ஒரு தையல்காரர். அவரது 'உஸ்வான்' நாவலுக்கு விருது கிடைத்துள்ளது. தையல்காரர்கள் சமூகத்தின் சோதனைகளையும் இன்னல்களையும் முன்வைத்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார்.
சாகித்ய அகாதெமி விருது
வறுமை காரணத்தால் ஏழாம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன்பின் தையல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில், 5,000 ரூபாய்க்கு வாட்ச்மேனாக வேலை பார்த்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் முடங்கிய நிலையில், முழு நேர எழுத்தாளராக எழுதி வந்துள்ளார்.
2021 வரை கவிதைகளை எழுதி வந்த இவர், 2022 இல் உஸ்வான் நாவலை எழுதி முடித்துள்ளார். நாவலை வெளியிடுவதற்காக 10க்கும் மேற்பட்ட பெரிய பதிப்பகங்களை நாடிச் சென்ற போதிலும் நாவலை யாரும் பிரசுரிக்கவில்லை.
இறுதியாக தேஷ்முக் முக்தா காட்போல் அண்ட் கம்பெனி இவரது நாவலை 500 பிரதிகளை வரை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 10 பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்ட நாவலுக்குத்தான் 2024 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.