யார் இந்த தேவிபாரதி..? 2023-ஆம் ஆண்டின் சாகித்ய விருது வென்றவர்..!
‘நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது
சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 24 மொழிகளில் வெளிவரும் புத்தகங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் 'நீர் வழிபடூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த தேவிபாரதி
தேவிபாரதியின் இயற்பெயர் ராஜ சேகரனாகும். ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த இவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். பின்னர் முழு நேர எழுத்தாளராக மாறிய ராஜசேகரன் தொடர்ந்து சிறுகதை,நாவல்களை எழுதி வருகின்றார். "
நீர்வழிப் படூஉம்" இவரது மூன்றாவது நாவலாகும்.ஏழை மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உறவையும் இந்நூல் ஆழமாக எடுத்துரைக்கிறது.விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி விருதுகள் வழங்கப்படுகின்றன.