சிறுநீர், மார்பகம், உப்பு, தாடிக்கு வரி - உலகின் வினோத வரிகள் எதெல்லாம் தெரியுமா?
உலகில் உள்ள வினோத வரிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வினோத வரிகள்
1696ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மன்னர் வில்லியம் IIIஆல் ஜன்னல்களுக்கு வரி விதிக்கப்பட்டது. 10 ஜன்னல்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு வரி செலுத்த வேண்டும். 1851இல் நீக்கப்படும் வரை சுமார் 156 ஆண்டுகள் நீடித்ததாக கூறப்படுகிறது.
1535ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் மன்னர் ஹென்றி VIII தாடிக்கு வரி விதித்தார். அவருக்கு பின் அவரது மகள் ராணி எலிசபெத் I, இரண்டு வாரங்களுக்கு மேல் தாடி வைத்திருக்கும் எவரும் வரி செலுத்த வேண்டும் என்ற விதியை உருவாக்கினார்.
19ஆம் நூற்றாண்டில், கேரளாவின் திருவிதாங்கூர் மன்னர், ஈழவா, திய்யா, நாடார் மற்றும் தலித் சமூகங்கள் போன்ற சில சாதிகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பகங்களை மூடுவதற்கு வரி விதித்தார்.
பேரரசர் வெஸ்பாசியன் பொது சிறுநீர் கழிப்பறைகளில் இருந்து சிறுநீரை விநியோகிக்க வரி விதித்தார். பண்டைய ரோமில், சிறுநீர் ஒரு மதிப்புமிக்க பொருளாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
14ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ் உப்பு வரியை விதித்தது. இந்த வரி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1945 இல் ஒழிக்கப்படும் வரை தொடர்ந்தது. இதேபோல் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உப்பு வரியை விதித்தனர். 1930இல் இதை எதிர்த்து மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். 1946 இல் இடைக்கால அரசாங்கத்தால் இறுதியாக ரத்து செய்யப்படும் வரை இந்த வரி நீடித்தது.