🔴மத்திய பட்ஜெட் 2025-26: வருமான வரி சலுகையால் ₹1 லட்சம் கோடி இழப்பு!
மத்திய பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.
பட்ஜெட் 2025
3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை (2025-26) 8வது முறையாக தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சர்க்கரை கலந்த தயிரை குடியரசுத் தலைவர் முர்மு ஊட்டி விட்டார். தொடர்ந்து நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
நிர்மலா சீதாராமன் பேச்சு
நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது.
இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும் இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்.
மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் கல்வி.
பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும். AI மையங்கள் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.
36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு முதியோருக்கான வட்டி வருவாயில் ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரித்ததன் மூலம் அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ₹1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ₹2,600 கோடியும் அரசுக்கு இழப்பு.