Sunday, May 4, 2025

700 கார்கள், 58 விமானங்கள், 20 அரண்மனைகள் - யார் அந்த பணக்கார அரசியல்வாதி!

Vladimir Putin Money Russia
By Sumathi 3 months ago
Report

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பணக்கார அரசியல்வாதி

ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் பணக்கார அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

putin

இவர் ஆண்டுக்கு 1,40,000 டாலர் (சுமார் 1.17 கோடி ரூபாய்) சம்பளம் பெறுகிறார். 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க செனட் நீதித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி,

உலகில் நம்பக்கூடிய வங்கிகளின் பட்டியல் - இந்தியாவின் ஒரே ஒரு வங்கிதான்!

உலகில் நம்பக்கூடிய வங்கிகளின் பட்டியல் - இந்தியாவின் ஒரே ஒரு வங்கிதான்!

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபார்ச்சூன் தரவுகளின் படி, 20க்கும் மேற்பட்ட ஆடம்பர அரண்மனைகள், 700க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், 900 கோடி மதிப்புள்ள படகு இல்லம், 60 ஆயிரம் முதல் 5 லட்சம் டாலர் வரை மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை வைத்துள்ளார்.

vladimir putin

மேலும், கருங்கடல் கடற்கரையில் 1,90,000 சதுர அடி பரப்பளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரண்மனையை வைத்துள்ளார்.

அதில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், சினிமா அரங்கம், காசினோ உட்பட அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. இதனுடன் 22 பெட்டிகள் கொண்ட குண்டு துளைக்காத ரயிலையும் வைத்துள்ளார். இது கோஸ்ட் ரயில் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.