ரூ.2 கோடி கொடுத்தும் வீட்டை விற்க மறுத்த முதியவர் - இப்போ நிலைமையை பாருங்க!

Viral Video China
By Sumathi Jan 28, 2025 09:45 AM GMT
Report

வீட்டை அரசுக்கு விற்க மறுத்த முதியவரின் நிலைமை கவலைகிடமாக மாறியுள்ளது.

முதியவர் பிடிவாதம்

சீனா, ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

china highway

அதன்படி, அந்த இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால் ஹுவாங் பிங் என்ற முதியவர் மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார்.

அரசு அதிகாரிகள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அனைத்தையும் மறுத்துள்ளார். பின், வீட்டை நடுவில் விட்டு விட்டு இருபக்கமும் நெடுஞ்சாலை அமைத்து முடித்தனர்.

விரும்பிய நபர் துணையாக கிடைக்கனுமா? உள்ளாடையை கழட்டி இரும்பு வேலியில் போடணுமாம்..

விரும்பிய நபர் துணையாக கிடைக்கனுமா? உள்ளாடையை கழட்டி இரும்பு வேலியில் போடணுமாம்..

தற்போதைய நிலை

தற்போது பயங்கர சத்ததிற்கு மத்தியில் அந்த வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதியவர், “முந்தைய காலத்திற்கு மீண்டும் செல்ல முடியும் என்ற வாய்ப்பு கிடைத்தால், அரசாங்கம் எனக்கு கொடுத்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வேன்.

இப்போது நான் ஒரு பெரிய பந்தயத்தில் தோற்றது போல உணர்கிறேன். வாகனங்களின் இரைச்சல், தூசியுடன், இந்த வீட்டில் இருக்க முடியாது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு என்னால் வசிக்க முடியுமா என்று கூட தெரியாது.” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.