குவிந்த அதிகாரிகள்; ஸ்டார் படங்கள் தயாரிப்பு - ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED ரெய்டு!
7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ED சோதனை
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு சில நாட்கள் வரை நடைபெற்றது.
தொடர்ந்து 1000 கோடி ரூபாய்க்கு அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையில் சில டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளின் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
எங்கெல்லாம்?
சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லம், மணப்பாக்கம் சிஆர் புரம் பகுதியில் உள்ள விசாகன் இல்லம், திருவல்லிக்கேணியில் வசிக்கும் தேவக்குமார் என்ற தொழிலதிபர் வீடு,
சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள பிரபல தனியார் அலுவலகம், பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். அண்மையில் நடந்த ஆகாஷ் இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.