2 மகள்களை கொன்று தற்கொலை செய்த தம்பதி - என்ன நடந்தது?
2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை
திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ்(42). இவரது மனைவி விக்டோரியா(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். விக்டோரியா ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
அலெக்ஸ் தான் நடத்தி வந்த துணிக்கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அந்தக் கடையை மூடி விட்டார். முன்னதாக, அந்த வியாபாரத்திற்காகப் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். மேலும், கடன் வாங்கி திருச்சியில் சொந்த வீடு ஒன்றையும் வாங்கியதாக கூறப்படுகிறது.
4 பேர் பலி
இதனால், அலெக்ஸூக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தம்பதிகள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி, தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கடன் அதிகமாக இருந்த சூழலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.