ஐடி பெண் ஊழியரை கடத்திய பரோட்டா மாஸ்டர் - அழகில் மயங்கியதாக வாக்குமூலம்
ஐ.டி. பெண் ஊழியரை, இளைஞர் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் அத்துமீறல்
கேரளாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். அங்குள்ள பிரபலமான ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் பணி முடிந்து வீடுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென இவரை வாயை பொத்தி, மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
உடனே இந்த பெண், அந்த நபரின் கையை பலமாக கடித்துள்ளார். தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு சற்று தொலைவில் நின்றிருந்த இளைஞர்கள் சம்பவ இடம் விரைந்து, இளம் பெண்ணை மீட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
உடனே தகவலின் பேரில் இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்பகுதில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தப்பிச்சென்ற நபர் பரோட்டா மாஸ்டர் லோகேஷ்வரன்(24) என்பது தெரியவந்தது.
பின் அவரை கைது செய்து விசாரித்ததில், நான் வேலை செய்யும் ஓட்டலுக்கு பெண் என்ஜினீயர் சாப்பிட வருவார். அவரது அழகில் மயங்கிய நான் அடைய வேண்டும் என திட்டமிட்டு அத்துமீறலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
