வீட்டிற்கு தெரியாமல் திருமணம்; பாத்ரூமில் குழந்தை பெற்ற பெண் - நேர்ந்த துயரம்
கழிப்பறையில் பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
7 மாத கர்ப்பம்
திருப்பூர், மேட்டுப்பாளையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு சென்ற பெண் ஒருவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார்.
உடனே அங்குள்ள பெண் உள்ளே சென்று பார்த்ததில், அந்த பெண் குழந்தை பிரசவித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். பின் தகவலின்பேரில், பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்ததில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்த போலீஸ் விசாரணையில், திருச்சியை சேர்ந்த 34 வயது பெண் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
கழிவறையில் பிரசவம்
கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் வேலைபார்க்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் திருமணம் செய்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அதே சமயம் திருமணமானதை தெரிவிக்காமல் அந்த பெண் உறவினர் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் 7 மாதம் கர்ப்பமாகியுள்ளார். அப்போதுதான் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. தற்போது தொடர்ந்து போலீஸாஎ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.