அள்ளிய டாஸ்மாக்; 45 ஆயிரம் கோடி வருமானம் - எவ்வளவு அதிகம் தெரியுமா?
டாஸ்மாக் வருமானம் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்
தமிழகத்தில் 4829 சில்லரை மதுபான விற்பனை கடைகளும். 2919 பார்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது 23, 986 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
வருமானம் அதிகரிப்பு
அதில், கடந்த நிதியாண்டில், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என
8 நாட்கள் தவிர இதர நாட்களில் இயங்கியதன் மூலம் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.