ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை; 2 மடங்கு அதிகம் - களைகட்டிய டாஸ்மாக்!
ஒரே நாளில் மட்டும் ரூ.290 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல்
தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
எனவே, மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
மது விற்பனை
கடந்த 16-ந்தேதி மட்டுமே ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும், நேற்று இரண்டரை மடங்கு அளவுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது.
சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.