கோடை: டாஸ்மாக்கில் புதிய பீர் வகைகள் - முண்டியடிக்கும் மதுப்பிரியர்கள்
ஆறு புதிய ரக பீர் வகைகளை டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ரக பீர்
தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடை காலம் துவங்கி உள்ளதால் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு ஒயின், பீர் ஆகியவை அதிகமாக விற்பனையாகி வருகிறது. எனவே தற்போது விற்கப்படும் 35 வகை உயிர்களோடு மேலும் புதிய 6 பீர் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
அதிக விற்பனை
குறிப்பாக தெலுங்கானா, கர்நாடகாவில் அதிகமாக விற்பனையாகும் பிளாக் பஸ்டர் பீர் கடந்த வாரம் டாஸ்மாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில், கர்நாடகாவில் தயாரிக்கப்படும் பிளாக் போர்ட், வுட்பெக்கர் லார்ஜர் ஆகிய பீர் ரகங்களும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் ஃபிளையிங் மங்கி லெஜர், ஹண்டர் சூப்பர் ஸ்ட்ராங், 330 மில்லி டின், 650 மில்லி பாட்டில் ஆகியவற்றில் இந்த பீர் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது.