வீட்டு சிலிண்டர் விலை சரமாரி உயர்வு - சென்னையில் விலை தெரியுமா?
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
சிலிண்டர் விலை
வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது. இந்நிலையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ 2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் ரூ 853 செலுத்த வேண்டும். உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு சிலிண்டர் விலை ரூ 550 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கண்டனம்
அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து, "நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சேடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பொட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும், பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் என கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களை தள்ளிவிட்டார்களே? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது.
மக்களே, அடவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. மத்திய பாஜக அரசே தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக" என கண்டனம் தெரிவித்துள்ளார்.