தமிழகம் முழுவதும் மூடப்படும் டாஸ்மாக் - முக்கிய அறிவிப்பு
மகாவீரர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகாவீரர் ஜெயந்தி
தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும்.
இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதன்படி, மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
டாஸ்மாக் விடுமுறை
இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும்,
பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.