பரந்தூர் புதிய விமான நிலையம்; மத்திய அரசின் க்ரீன் சிக்னல் - பணிகள் எப்போது?
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் 10 வருடங்களில் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும்.
இதை சமாளிக்கும் வகையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் 70 கிமீ தொலைவில் உள்ளது.
சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இதற்காக அங்கு 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒருபுறம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு அனுமதி
இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்ட அனுமதிக்குக் கொள்கை அளவிலான ஒப்புதலைத் தற்போது வழங்கியுள்ளது. அடுத்த ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும் என்பதாக தெரிகிறது.
மேலும் இதற்கிடையில் மேற்கு புறநகர்ப் பகுதிகளை பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் மெட்ரோ அமைக்கப்படவுள்ளது. இது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் திறக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ நெரிசலைக் குறைக்கும் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.