பிரேக் பிடிக்கல; பல வாகனங்களை இடித்து தள்ளிய லாரி - 13 பேர் பலி!

Death Tanzania
By Sumathi Jun 06, 2024 09:49 AM GMT
Report

லாரியால் ஏற்பட்ட தொடர் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர் விபத்து

தான்சானியா, எம்பெம்பேலா பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பிரேக் திடீரென பழுதாகியுள்ளது.

பிரேக் பிடிக்கல; பல வாகனங்களை இடித்து தள்ளிய லாரி - 13 பேர் பலி! | Tanzania Traffic Accident 13 Died

இதில், சிமிக் சரிவுப்பாதையில் லாரி சிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. அப்போது, முன்னால் சென்ற மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் பல மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியது.

பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து - 13 மாணவர்கள் பலி!

பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து - 13 மாணவர்கள் பலி!

 13 பேர் பலி

இந்த பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள எம்பெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேக் பிடிக்கல; பல வாகனங்களை இடித்து தள்ளிய லாரி - 13 பேர் பலி! | Tanzania Traffic Accident 13 Died

இதில், 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.