பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து - 13 மாணவர்கள் பலி!
China
Death
By Sumathi
பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
சீனா, ஹெனான் மாகாணத்தில் யான்ஷான்பு கிராமத்தில் யிங்காய் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி விடுதியில் இரவு திடீரென தீப்பற்றியது.
உடனே விபத்து குறித்து பள்ளி அதிகாரிகள் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் முயற்சித்து தீயை அணைத்தனர்.
13 பேர் பலி
இந்த பயங்கர விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தற்போது தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.