திடீரென தீ பற்றி எரிந்த ஹாலிவுட் பிரபல Warner Bros ஸ்டூடியோ - பரபரப்பு!
அமெரிக்காவில் பிரபல ஸ்டூடியோ தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வார்னர் பிரதர்ஸ்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப் பெரிய படத்தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ அமைந்துள்ளது.
இதில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது அங்கு உள்ள பார்க்கிங் பகுதியில் வேகமாக பரவியதால் அங்கு புகைமூட்டமானது.
தீ விபத்து
இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சில நிமிடங்களில் இந்த ஸ்டூடியோவில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர்.
மேலும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.