கோர விபத்து: நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - 36 பேர் பரிதாப பலி!

Train Crash Accident Death Greece
By Sumathi Mar 01, 2023 07:19 AM GMT
Report

 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் விபத்து

ஏதேன்சில் இருந்து தெஸ்ஸாலொனிகி நகருக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் 350 பயணிகள் பயணித்தனர். லரிசா அருகே தெம்பி என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

கோர விபத்து: நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - 36 பேர் பரிதாப பலி! | Trains Collided In Greece 32 Persons Died

2 ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில், பயணிகள் சென்ற ரயிலில் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

 32 பேர் பலி

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து, 150 க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 194 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.