தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 'செல்வப்பெருந்தகை' நியமனம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 'செல்வப்பெருந்தகை' நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை காங்கிரஸ் கட்சி சந்தித்தது.
இவரின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்வுசெய்யும் பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டியது.
செல்வ பெருந்தகை
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், புதிய சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை புதிய தலைவரை மாற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பு அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது