2G வழக்கில் ஆதாரங்களை மாற்ற - ஆ.ராசா - ஜாபர் சேட் உரையாடல் - வெளியிட்ட அண்ணாமலை..!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Feb 17, 2024 11:04 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்து அடுத்தடுத்த ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றார்.

DMK பைல்ஸ்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "DMK பைல்ஸ்" என்ற பெயரில் திமுகவின் ஊழல் பட்டியல் என்ற ஆடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் "DMK பைல்ஸ்" பாகம் ஒன்று, ஜூலை மாதம் பாகம் இரண்டு போன்றவற்றை வெளியிட்டார்.

dmk-files-part-3-tape-4-annamalai-releases

இதையடுத்து "DMK பைல்ஸ்" பாகம் மூன்று என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். திமுகவின் எம்.பி'க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தனித்தனியே முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

ஆ.ராசா - ஜாபர் சைட்

தற்போது "DMK பைல்ஸ்" பாகம் மூன்றின்’ 4-வது ஆடியோ பதிவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ளது.

DMK files 3- ஆ.ராசாவின் ரகசிய பேச்சு - அண்ணாமலையின் அடுத்த டார்கெட்...!

DMK files 3- ஆ.ராசாவின் ரகசிய பேச்சு - அண்ணாமலையின் அடுத்த டார்கெட்...!

இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பதிவில் அண்ணாமலை,“நான்காவது டேப்: திமுக எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் இடையேயான உரையாடல். ஆ.ராசா-  (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) & எம்எஸ் ஜாபர் சைட், தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர். #திமுக கோப்புகள் 3

2ஜி ஊழலில் திமுகவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையின் தலையீடு, முக்கிய ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்கவோ அல்லது மாற்றவோ முடியும் என்பதற்காக ரெய்டு பற்றிய முன்கூட்டிய தகவல் பகிரப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.