DMK files 3- ஆ.ராசாவின் ரகசிய பேச்சு - அண்ணாமலையின் அடுத்த டார்கெட்...!

Andimuthu Raja K. Annamalai
By Karthick Jan 17, 2024 12:13 PM GMT
Report

DMK files பார்ட் 3’யில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தொடர்புடைய ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

DMK files 3

தமிழ்நாட்டின் ஆளும் கட்சி திமுகவிற்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்களை வைத்து கொண்டே உள்ளார். DMK files என்ற தலைப்பில் பல்வேறு சிக்கல்கள் கொண்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

annamalai-dmk-files-3-accquesting-dmk-mp-a-raja

முதலில், திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு தொடர்புடைய தகவல்களை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, பிடி ஆர் குறித்த சர்ச்சைக்குறிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக ஆட்சியில் கடைசி இடம்..ஆனா இப்போ நாம் தான் டாப் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்..!

அதிமுக ஆட்சியில் கடைசி இடம்..ஆனா இப்போ நாம் தான் டாப் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்..!

இந்நிலையில் இன்று தற்போதைய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா சிக்கியிருந்த 2G வழக்கு தொடர்பாகவும் தனக்கு ஆதரவாக இருந்த அப்போதைய உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் பேசிய ஆடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

ஆ.ராசா ஆடியோ

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்தபோது மத்திய தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. இவரின் மீது 2ஜி தொடர்பாக 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி Spectrum முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

annamalai-dmk-files-3-accquesting-dmk-mp-a-raja

இதையடுத்து ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து ஜாமினில் வெளியே வந்த ஆ.ராசா, இந்த வழக்கினை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் தன்னை நிரபராதி என நிருபித்தார்.

அப்போது 2ஜி வழக்கின் தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் ஆ.ராசா தொலைப்பேசியில் பேசிய ஆடியோவினை தான் தற்போது அண்ணாமலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.