அதிமுக ஆட்சியில் கடைசி இடம்..ஆனா இப்போ நாம் தான் டாப் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்..!
StartUp தரவரிசைப்பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை அடைந்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பெருமிதம்..!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், #StartUp தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு,
நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
மேலும் உயரங்களைத் தொட
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
#StartUp தரவரிசைப் பட்டியலில்,
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024
கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு,
நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad… https://t.co/hNapJChxvR
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த மாண்புமிகு அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.