வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - மறைமுக பதிலடி கொடுத்த முதலமைச்சர்..!

M K Stalin R. N. Ravi K. Annamalai
By Karthick Jan 16, 2024 06:46 AM GMT
Report

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோரின் பதிவு சர்ச்சையான நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் பதிவு

அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

காவி உடை - சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளூவர்..? சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை - ஆர்.என்.ரவி..!

காவி உடை - சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளூவர்..? சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை - ஆர்.என்.ரவி..!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

mk-stalin-wishes-and-post-in-thiruvalluvar-issues

குறள் நெறி நம் வழி!

குறள் வழியே நம் நெறி" என பதிவிட்டுள்ளார்.

 ஆளுநர் - அண்ணாமலை பதிவு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில், திருவள்ளுவரை காவி உடையில் சித்தரித்திருந்த படத்தை வெளியிட்டிருந்தார். அது சர்ச்சையான விஷயமாக மாறியது.

mk-stalin-wishes-and-post-in-thiruvalluvar-issues

முன்னதாக, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பதிவை வெளியிட்டுருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன பாரம்பரியத்தின் துறவி என திருவள்ளுவரை குறிப்பிட்டு, காவி உடையில் இருப்பது போன்ற படத்தையே இணைத்திருந்தார்.