காவி உடை - சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளூவர்..? சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை - ஆர்.என்.ரவி..!

Government of Tamil Nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Karthick Jan 16, 2024 06:23 AM GMT
Report

தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து முரணான நிலைமை நீடித்து வருகின்றது.

ஆளுநர் பதிவு

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.

annamalai-rn-ravi-post-about-thiruvalluvar

இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை பதிவு

அதே போல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

annamalai-rn-ravi-post-about-thiruvalluvar

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது.

உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை

இந்த பதிவுகள் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவி உடையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவிலும், சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என திருவள்ளுவரை ஆளுநர் குறிப்பிட்டுள்ளதும் விவாதப்பொருளாகியுள்ளது.

annamalai-rn-ravi-post-about-thiruvalluvar

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதன தர்மத்துடன் இணைத்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.