ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா - மக்களவைத் தேர்தலில் போட்டி?
ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்
2019ல் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்படார். தொடர்ந்து, 2021ல் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பேற்றார்.
கடந்த தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக போட்டியிட்ட தமிழிசை தோல்வியை தழுவினார். மேலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழிசை தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
ராஜினாமா
இந்நிலையில், தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுப்பியுள்ளார்.