மீனை சைவ உணவாக்கனும்; எளிதில் விட்டுட முடியாது - விடாமல் வலியுறுத்தும் தமிழிசை செளந்தரராஜன்!
மீன் உணவை சைவ உணவில் சேர்க்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், “மீனவ சகோதரர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமா அதனை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன.
கோரிக்கை
நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே, மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வராது. மீன் உணவை சைவ உணவில் சேர்ப்பதன் மூலம் அதனை அதிகமான மக்கள் சாப்பிட முடியும்.
எப்படி முட்டையில் அதிகமான புரோட்டின் இருந்ததால் அதை அசைவத்தில் இருந்து சைவமாக மாற்றி இருந்தார்களோ அதைப்போல மீனையும் மாற்ற வேண்டும்.
இதனை ஆளுநராக இல்லாமல் மருத்துவராகவும் கூறுகிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.