காமராஜர் பெயரை சொல்லாமல் எப்படி? ஏன்? சோனியா காந்தியை சீண்டிய தமிழிசை!

Smt Tamilisai Soundararajan Sonia Gandhi
By Sumathi Oct 15, 2023 10:58 AM GMT
Report

காமராஜரை சோனியா காந்தி மறந்துவிட்டதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா- மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,

காமராஜர் பெயரை சொல்லாமல் எப்படி? ஏன்? சோனியா காந்தியை சீண்டிய தமிழிசை! | Tamilisai Soundararajan Against On Sonia Gandhi

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில்,

மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யோசனை!

மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யோசனை!

காமராஜர் பெயர்?

“சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள்.

காமராஜர் பெயரை சொல்லாமல் எப்படி? ஏன்? சோனியா காந்தியை சீண்டிய தமிழிசை! | Tamilisai Soundararajan Against On Sonia Gandhi

ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்? என கேஎள்வி எழுப்பியுள்ளார்.