மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யோசனை!
மீன் உணவை சைவத்தில் சேர்க்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரியுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும், நோய்நொடி இல்லாமலும் இருக்கலாம் என மருத்துவர்களும், அறிவியல் ஆய்வுகளும் தொடர்ந்து கூறி வருகிறது.
மீன் - சைவம்
ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டபோது மீன் சமைக்கப்பட்டது. அப்போது அவர்கள், நாங்கள் மீனை அசைவம் என்று நினைப்பது இல்லை, சைவம் என்று தான் நினைக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள்.
அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள்.
புதுச்சேரியை பொறுத்த அளவில் எந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டாலும் அது வரும் காலத்தில் பெரிய திட்டமாக மாற்றப்படும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.