தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா? இது லிஸ்ட்லயே இல்லயே!

Smt Tamilisai Soundararajan Gossip Today Saravanan Arul The Legend
By Sumathi 4 மாதங்கள் முன்

லெஜண்ட் சரணவன் அருளும், தமிழிசை சவுந்தரராஜனும் நெருங்கிய உறவினர்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

சரணவன் அருள்

பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளருமான சரணவன் அருள், தமிழ் சினிமாவில் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா? இது லிஸ்ட்லயே இல்லயே! | Legend Saravanan And Tamilisai Are Relatives

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை‌ இயக்குநர்‌கள் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக, தி லெஜெண்ட் வெளியாகி வரவேற்புகளையும், விமர்சனங்களையும் பெற்று உள்ளது. தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும்,

தமிழிசை சவுந்தரராஜன்

உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் லெஜண்ட் சரணவன் அருள் குறித்த தகவல் ஒன்று நமக்கு கிடைத்து உள்ளது. அதன் படி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், சரணவன் அருளும் உறவினர்களாம்.

தமிழிசையோட மருமகன் தான் லெஜண்ட் சரவணனா? இது லிஸ்ட்லயே இல்லயே! | Legend Saravanan And Tamilisai Are Relatives

லெஜண்ட் சரவணனின் மனைவிக்கு, தமிழிசையின் அம்மா சித்தி உறவாம். அப்படி பார்த்தால் லெஜண்ட் சரவணன், தமிழிசைக்கு மருமகன் முறை வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ நாள் நமக்கு இந்த விஷயம் தெரியாம போச்சே என வாய்ப்பிளந்து உள்ளனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.