கதையே எனக்கு பிடிக்கல... இவர் நடிச்சா யாரு பார்ப்பா... - லெஜண்ட் சரவணன் பற்றி ஹாரிஸ் ஓபன் டாக் - ரசிகர்கள் ஷாக்

Saravanan Harris Jayaraj
By Nandhini 6 மாதங்கள் முன்

பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன், ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா ஹீரோயினாக நடிக்க, நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடி வாசல்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாட்டை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லெஜண்ட் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் பூஜா ஹெக்டே, தமன்னா, ராய் லட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவ்துலா, டிம்பிள் ஹயாத்தி என 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் கலந்துகொண்டனர். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா வரும் மே 29ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

அப்போது, இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட இருக்கிறது. இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், முதலில் இப்படத்தின் கதையைக் கேட்டதும் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

பின்னர் 6 மாதத்திற்கு பிறகு இப்படத்தின் இயக்குனர்கள் கதையை மாற்றிவிட்டு வந்து சொன்னதும் ஒப்புக்கொண்டேன். லெஜண்ட் சரவணன் எனது நண்பர். அவருடன் எனக்கு 12 வருடம் பழக்கம் உள்ளது.

இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் நடிச்சா யாரு பார்ப்பாங்கனு நினைச்சேன். ஆனால், அவர் இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தின் மிகப்பெரிய பலமே படக்குழு தான் என்று ஓபனாக பேசினார். 

கதையே எனக்கு பிடிக்கல... இவர் நடிச்சா யாரு பார்ப்பா... - லெஜண்ட் சரவணன் பற்றி ஹாரிஸ் ஓபன் டாக் - ரசிகர்கள் ஷாக் | Legend Saravana