பிரகாஷ் ராஜ் என்ன சாதிச்சுட்டாருன்னு அவருக்கு விசிக விருது கொடுத்தது? தமிழிசை காட்டம்!
பிரகாஷ் ராஜ்க்கு எதன் அடிப்படையில் விசிக விருது கொடுத்திருக்கிறார்கள்? என தமிழிசை கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழிசை சவுந்தர்ராஜன்
தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சாதாரண மனிதர்களைப்போல ‘பயலாஜிக்கலாக’ நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. என்னை பரமாத்மா அனுப்பி வைத்திருக்கிறார் என பிரதமர் மோடி கூறியுருந்த நிலையில், பிரதமர் கூறியதை நான் தவறு என நினைக்கவில்லை.
அவருடைய நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் கூர்ந்து பார்த்தீர்கள் என்றால், அபரிமிதமான சக்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அபரிமிதமான பணி செய்யும்போது தனக்கு அபரிமிதமான பவர் இருக்கிறது என நம்புவதில் எந்த தவறும் இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.
எதுக்கு விருது?
இதுகுறித்து பிரதமர் மோடி சிறந்த நடிகர், அவர் தெய்வ மகன் இல்லை. டெஸ்ட்டியூப் பேபி என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை, பிரகாஷ் ராஜ் தனக்கு எம்.பி பதவி வேண்டும் என கேசிஆர்-ரிடம் மண்டியிட்டு இருந்தார்.
என்னை கர்நாடகாக்காரன் என நினைக்க வேண்டாம். தெலுங்கு மக்களுக்காகப் போராடுகிறேன் என்றெல்லாம் பேசினார். வி.சி.க எதன் அடிப்படையில் விருது கொடுத்திருக்கிறார்கள்? அவர் என்ன சாதித்து விட்டார்? மோடியை எதிர்க்கிறார் என்பதற்காக விருது கொடுக்கிறீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.