கலைஞர் இருந்திருந்தால் நான் பேசியிருக்க மாட்டேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்
கலைஞர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் யாரும் வாலாட்ட முடியவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஒரு வருடமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. அதன் நிறைவு விழாவாக சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் வரலாற்று புகைப்பட கண்காட்சி இந்து சமய அறநிலைய துறை சார்பில் நடைபெற்றது.நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது, இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்கும் பொது எனக்கு பேச்சு வரவில்லை. கண் கலங்குகிறது. கலைஞருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து எனக்கு மகிழ்ச்சியான விஷயம், அவர் என்னை அன்பாக பார்த்த மனிதர். அவருடன் நான் இரண்டு வருடம் பழகிய காட்சிகளை விட அதிகமான காட்சிகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
இடஒதுக்கீடு
கலைஞர் இலக்கியம் குறித்து அதிகம் பேசுவார். கலைஞரின் உயரம் என்பது அவரால் உயர்ந்து நிற்பவர்களின் உயரத்தில் உள்ளது. 50% இடஒதுக்கீட்டிற்க்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதோ 69% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் கலைஞர். அவர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் யாரும் வாலாட்ட முடியவில்லை. அவர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை.
கலைஞரின் கொள்கைகளை ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்றுவிட்டது இனி தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட மாட்டோம். பாஜக தோற்பதற்கான எல்லா வேலைகளையும் மோடி செய்து விட்டார். ஜூன் 4 க்கு பிறகு அவர் சும்மா தான் இருப்பார். அவரையும் இந்த கண்காட்சியை பார்க்க அழைக்கலாம் என பேசியுள்ளார்.