தோல்வியைத் தழுவினால் மீண்டும் ஆளுநரா? - சட்டென சொன்ன தமிழிசை

Smt Tamilisai Soundararajan BJP Chennai Lok Sabha Election 2024
By Karthick Mar 22, 2024 05:15 AM GMT
Report

தென் சென்னை வேட்பளராக பாஜக சார்பில் களமிறங்குகிறார் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன்

தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் போன்ற பதவிகளை ராஜினாமா செய்து தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

tamilisai-interview-in-contesting-lok-sabha

தேர்தலில் அவரின் வெற்றி இது வரை இல்லை என்றாலும், ஆளுநராக இருந்த பிறகு கணிசமாக அவரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அவரை வேட்பாளரை மீண்டும் களமிறங்கியுள்ளது பாஜக.

tamilisai-interview-in-contesting-lok-sabha

தென் சென்னையில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுகவில் ஜெயவர்தன், பாஜகவில் தமிழிசை சௌந்தரராஜன் என ஸ்டார் வேட்பாளர்கள் களம்காணுகிறார்கள்.

மீண்டும் ஆளுநரா..?

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு தமிழிசை அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி - தென் சென்னை எதிர்பார்த்த தொகுதியா..?

தமிழிசை பதில் - எதிர்பார்த்தது - வெற்றி பெற தொகுதி தான். கட்சி எந்த இடத்தில் போட்டியிட ஆணையிடுகிறதோ அங்கு போட்டியிடுவது கடமை.

tamilisai-interview-in-contesting-lok-sabha

கேள்வி - 2019-இல் தூத்துக்குடி, தற்போது தென் சென்னை இந்த மாற்றம் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழிசை பதில் - வெற்றி பெற வைப்பதே கடமை. மக்கள் சேவைக்காக திரும்பி வந்துவிட்டேன் மட்டுமில்ல - விரும்பி வந்துவிட்டேன்.

Star தொகுதியாகும் தென் சென்னை - தமிழச்சி vs ஜெயவர்தன் vs தமிழிசை..?

Star தொகுதியாகும் தென் சென்னை - தமிழச்சி vs ஜெயவர்தன் vs தமிழிசை..?

கேள்வி - மும்முனை போட்டி குறித்து..?

தமிழிசை பதில் - தேர்தல் என்றால் போட்டி தானே. அனைத்து கட்சியும் பலமான வேட்பாளராகளை நிறுத்த தான் செய்வார்கள். ஆளுநர் பதவியை துறந்து, மக்கள் பணிக்காகவே வந்துள்ளேன். என்னுடைய பாசிட்டிவான விஷயங்களை கூறி வாக்கு கேட்கவுள்ளேன். தென் சென்னையில் வேட்பாளராக இல்லாமல் வாக்காளராகவே போட்டியிடுகிறேன் என்னென்ன பிரச்சனை என நன்றாக தெரியும், அதனால் வெற்றி வாய்ப்பு கைகூடும்.

tamilisai-interview-in-contesting-lok-sabha

கேள்வி - உங்கள் தேர்தல் வியூகம் என்ன..?

தமிழிசை பதில் - வெற்றி பெற கூடிய பிரச்சாரம் தான். வியூகங்கள் பிரமாண்டமாக இருக்கும் ஆனால் அதனை வெளியில் சொல்ல கூடாது.

கேள்வி - ஒருவேளை தேர்தலில் தோல்வியுற்றால், மீண்டும் ஆளுநர் ஆவீர்களா ..?

தமிழிசை பதில் - ஒருவேளை என்ற பேச்சிற்கே இடமில்லை. வெற்றி தான். நிச்சயமாக பாராளுமன்ற உறுப்பினராகவேன். 400-இல் நானும் ஒருவள்.