பொங்கல் பரிசு ரூ.1000; டோக்கன் எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்காது!

Thai Pongal M K Stalin Tamil nadu
By Sumathi Jan 06, 2024 05:34 AM GMT
Report

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படும்.

pongal-gift-rs-1000

அதன்படி, இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

டோக்கன் விநியோகம்

அதேபோல இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். அதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்கும். அதன்பின், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.

பொங்கல் பரிசு ரூ.1000; டோக்கன் எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்காது! | Tamil Nadu Govt Pongal Gift Rs 1000 Token Info

சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும். வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.