பொங்கல் பரிசு ரூ.1000 எப்போது? பொருட்களுக்கு பதில் வங்கி கணக்கில் ரூ.500 - அரசு ஆலோசனை
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசு
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் வைப்பதற்கான பச்சரிசி, வெல்லம் அல்லது சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுபோல, ரூ.1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தாக்கிய மிக்ஜாம் புயல், தொடர்ந்து 17, 18-ம் தேதிகளில் தென் மாவட்டங்களை மூழ்கடித்த வெள்ளம் ஆகியவற்றுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது.
அரசு ஆலோசனை
அதனால், பொங்கல் தொகுப்புக்கான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே, பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகுப்புடன் வழக்கம்போல பணமும் வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அதுகுறித்த ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதேபோல், புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.