பொங்கல் பரிசு தரமற்றது : எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழகஅரசு பொங்கல் பரிசு தொகுப்பை தரமற்ற முறையில் வழங்கியது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி :
திமுக அரசு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி கொண்டுள்ளனர்.21 பொருட்கள் தருவதாக அறிவித்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு எடுத்துச் செல்வதற்கு கட்டை பை வீட்டிலிருந்து வரும்போது எடுத்து வரும்படி அறிவித்துள்ளனர். பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு மட்டுமே கைப்பை பயன்படும் அதை விடுத்து பொருட்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றதும் வழங்குவது பயனற்றது.
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றவையாக வழங்கப்படுவதாக பொதுமக்களின் வீடியோவை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாக கூறினார்.தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவித்து அதற்கு அபராதமும் விதித்தோம்.
ஏற்கனவே நான் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விளம்பரத்துக்காக செயல்படுகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது.
பொங்கல் பரிசு வழங்குவதில் கமிஷன் கிடைப்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்,பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளை அடிப்பது தான் மிச்சம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டினார். த
மிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகும் இது போன்று பொங்கல் பரிசு தொகுப்பு தரமான பொருட்களையே வழங்குகிறார்கள்.
மேலும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி,சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வேஸ்டி சேலை வழங்கப்படவில்லை என்றார்.