தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை உண்டா..? அதிகரிக்கும் வலியுறுத்தல்கள்..!
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் எப்போது பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவுப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ராமதாஸ் வலியுறுத்தல்
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும் -வெற்றி வசப்படும்! கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2024&ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன. ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக நம்மை வாட்டி வதைக்கும் கொரோனா, இப்போதும் நம்மைச் சூழ்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சென்னையிலும், நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட மழை & வெள்ளம் தமிழகத்தின் இரு முனைகளையும் சிதைத்திருக்கிறது. அவற்றிலிருந்து மீள்வதே புதிய ஆண்டின் சவாலாக இருக்கும்.
அமைதியும், நிம்மதியும்
நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப் படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடப்பாண்டுக்கு விடை கொடுக்கும் வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் வகையிலும் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தை புதிய வகை கொரோனோ பரவலால் இந்த ஆண்டு நடத்த முடியவில்லை.
இன்னும் சில வாரங்களில் களச்சூழலும், நலச்சூழலும் மாறும். அப்போது நமது பொதுக்குழுவைக் கூட்டி, கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்போம். நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்.
புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024&ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.... அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.