அதிகரிக்கும் அச்சுறுத்தல் - கருணைக்கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!
தெருநாய்களை கருணைக்கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
கருணைக்கொலை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நாய்களால் மனிதர்கள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரப் பொருத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலைகளில் உலா வரும் நாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
தற்போது ரேபிஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய கேரளா அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் நோய்வாய்ப்பட்டு திரியும் நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அரசு அனுமதி
இதனைத் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுள்ள தெரு நாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்," தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, இதில், நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம். இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். தெரு நாய்களால் பொது மக்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால்
கால்நடைத்துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.