தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்றவேண்டும் - துரைமுருகன் சொன்னதை கவனிச்சீங்களா?

Tamil nadu Chennai Durai Murugan trichy
By Sumathi Feb 15, 2024 05:14 AM GMT
Report

தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்றலாம் என்ற யோசனைக்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

 சட்டசபை விவாதம்

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,

durai murugan

“நெல்லை, நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு மக்கள் எவ்வளவு கட்டணம் கொடுக்கிறார்களோ, அதே கட்டணத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு தர வேண்டியுள்ளது. பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டுக்கு சென்றோம். அங்கிருந்து கிளாம்பாக்கம் சென்றுள்ளோம்

. அடுத்த பத்து வருடங்களில் செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்றும் சூழல் வந்தாலும் வரலாம். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நடைபெறுவதால் இதனை தவிர்க்க முடியாது. தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றிவிட்டால் குறைவான நேரத்தில் திருச்சிக்கு வந்துவிடலாம்.

ED கதவை தட்ட தேவையில்லை...திறந்தே தான் இருக்கும்..! துரைமுருகன் பதிலடி..!

ED கதவை தட்ட தேவையில்லை...திறந்தே தான் இருக்கும்..! துரைமுருகன் பதிலடி..!

துரைமுருகன் பதில்

போக்குவரத்து நெரிசலையும் தடுக்க முடியும்” எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “திருச்சியை தலைநகர் ஆக்கினாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆகவே, சென்னையிலேயே தலைநகர் இருக்கட்டும்” என பதிலளித்தார். இதற்கு நயினார் நாகேந்திரன்,

தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்றவேண்டும் - துரைமுருகன் சொன்னதை கவனிச்சீங்களா? | Tamil Nadu Capital Chennai To Trichy Duraimurugan

திருச்சியை தலைநகராக்க வேண்டும் எனது எம்ஜிஆரின் கோரிக்கை எனக் கூற, உடனே குறுக்கிட்ட அப்பாவு, “எம்ஜிஆர் கோரிக்கை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நினைத்திருந்தால் மாற்றி இருக்கலாம்” என்று கூறினார். மேலும், இதற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,

“தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்கிற நல்ல யோசனை கூறுகிறீர்கள். அப்படியே, தலைநகர் டெல்லியையும் சென்னைக்கு கொண்டு வந்துவிட்டால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.