என்னோட சமாதியில் இதை எழுதுங்கள் அது போதும் : கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்
என் சமாதியில் இதனை எழுதினால் போதும் என பேரவையில் உருக்கமாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
நடுரோட்டில் விடவில்லை
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நடந்தாய் வாழி காவிரி திட்டம் நல்ல திட்டம். அது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சொல்லி உத்தரவிடப்பட்டது. அத்துடன் உங்கள் ஆட்சி முடிந்துவிட்டது; ஆனால் எங்கள் ஆட்சி வந்ததும் நடந்தாய் வாழி காவிரியை நடுரோட்டில் விடவில்லை, செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்
வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் நீர் தேக்கங்களில் உள்ள வெள்ளை கதவுகளின் இயக்கம், சிறப்பு மென்பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப்படும். இப்பணி ₹32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். கோயம்புத்தூர் உட்பட 8 மாவட்டங்களின் 15 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் ₹70.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனை எழுதுங்கள்
மேலும் தொடர்ந்து பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் நான் நீண்ட காலமாக திமுகவில் இருப்பவன் இனி வரும் நாட்களிலும் இருப்பேன், என்றைக்காவது ஒரு நாள் மறையப்போகிறேன் அப்போது எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதுங்கள் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.