ED கதவை தட்ட தேவையில்லை...திறந்தே தான் இருக்கும்..! துரைமுருகன் பதிலடி..!
அண்ணாமலை துரைமுருகன் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
துரைமுருகன் பேட்டி
செய்தியாளர்களை தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனிடம், அண்ணாமலை விரைவில் அமலாக்கத்துறை எம்.கதிர் ஆனந்தின் கதவை தட்டும் என தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த துரைமுருகன், "அவுங்க கதவெல்லாம் தட்ட வேண்டாம், நாங்க திறந்தே வைக்கிறோம் வர சொல்லுங்க" என தனது பணியில் பதிலடி கொடுத்தார்.
பெரிய economist'ஆ
அடுத்து தமிழ்நாடு பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த துரைமுருகன், அண்ணாமலை என economist'ஆ என்று கேள்வி எழுப்பி, பெரிய பெரிய பொருளாதார வல்லுநர்கள் தமிழ்நாட்டின் பொருளதாரம் குறித்து பாராட்டியுள்ளதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் அதிகமான இடங்களை கேட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதனை குறித்தெல்லாம் தான் எந்த கருதும் தெரிவிக்கப்போவதில்லை என்று கூறி, ஏதாவது கூற அதனை பரபரப்பாகி விடுவார்கள் என்றும் தெரிவித்து சென்றார்.