அடுத்த தமிழக பாஜக தலைவர் - போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்?
அடுத்த தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
தொடர்ந்து அண்ணாமலை விரைவில் மாற்றப்படக்கூடும் என்கிற தகவல் வெளியானது. அதன்படி, தமிழகத்தின் புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று அறிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
எனவே, அடுத்தபடியாக நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அமித்ஷா சென்னை வந்துள்ளார். தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் வீட்டிற்கு சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். தற்போது தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலுக்காக நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜக மூத்த நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.