தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை
2024 ஆண்டுக்கான முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 13, 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
15-ம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் 19-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிறைவு நாள்
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
அதன்பின், சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அதனையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.