மீண்டுமா.. தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவையில் பரபரப்பு!

M K Stalin Tamil nadu R. N. Ravi
By Jiyath Feb 12, 2024 06:02 AM GMT
Report

தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. 

கூட்டத்தொடர் 

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

மீண்டுமா.. தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவையில் பரபரப்பு! | Tamilnadu Governor Rn Ravi Completely Boycotted

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளுநர், முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தனர். தலைமைச் செயலகம் வந்த ஆளுநருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

எனக்கு ஒட்டு போடாவிட்டால் 2 நாள் சாப்பிடாதீர்கள் - பள்ளி குழந்தைகளிடம் MLA சர்ச்சை பேச்சு!

எனக்கு ஒட்டு போடாவிட்டால் 2 நாள் சாப்பிடாதீர்கள் - பள்ளி குழந்தைகளிடம் MLA சர்ச்சை பேச்சு!

புறக்கணித்த ஆளுநர் 

இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.

மீண்டுமா.. தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவையில் பரபரப்பு! | Tamilnadu Governor Rn Ravi Completely Boycotted

மேலும், தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார். தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.